9வது பாஸ் ஆகியிருந்தால் போதும்... 3900 காலி பணியிடங்கள்... வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம்!

 
மகிலா வேப் ஃப்ரம் ஹோம்

ஒன்பதாவது தேர்ச்சியடைந்திருந்தால் போதும். வீட்டிலிருந்தபடியே வேலைப் பார்க்க அரிய வாய்ப்பு. ராஜஸ்தான் மாநிலத்தில், “மகிலா வேப் ஃப்ரம் ஹோம்” திட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில் டெலிகாலிங், சமூகவலைதளங்கள் சந்தைப்படுத்தல், அலுவலக வடிவமைப்பு, டிஜிட்டல் கடை இயக்கி போன்ற பதவிகளுக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.  இந்த திட்டத்தில் 3900க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

மகிலா வேப் ஃப்ரம் ஹோம்
எதிர்காலத்தில் கூடுதல் காலியிடங்கள் வரலாம். விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி மற்றும் தகுதிகள் பதவிக்கு ஏற்ப மாறுபடும், எனவே அதிகாரப்பூர்வ இணையதளமான www.rajasthan.gov.in ல் பார்த்து அறிந்து கொள்ளலாம்.   விண்ணப்பிக்க தகுதிகள்: 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி 
தையல், கச்சிதா, ஆரி தாரி போன்ற வேலைகளுக்கு கல்வி தகுதி தேவையில்லை, ஆனால் அந்த வேலை குறித்து தெரிந்திருக்க வேண்டும். வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். ஜன் ஆதார் எண் மற்றும் ராஜஸ்தான் ஆதார் எண் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: www.mahilawfh.rajasthan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். “Career Opportunities” பிரிவில் உள்நுழையவும். மாவட்ட வாரியாக பட்டியல் மற்றும் விண்ணப்ப இணைப்பு தோன்றும். “Apply Now” ஐ அழுத்தவும். புதிய பயனராக பதிவு செய்ய “New User Register” ஐ தேர்ந்தெடுக்கவும். 

மகிலா வேப் ஃப்ரம் ஹோம்

ஆதார் எண்ணையும் உறுப்பினர் ஐடியையும் நிரப்பவும். பதிவு செய்த பின் உருவாக்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் பாஸ்வாட் பயன்படுத்தி உள்நுழையலாம். இதில் கேட்கப்படும்  தகவல்களை நிரப்பி, புகைப்படம் அல்லது கையொப்பத்தை சரியான அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். படிவத்தை சமர்ப்பித்து அச்சு பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?