முன்கூட்டியே கடனை செலுத்தினால் கட்டணம் வசூலிக்கக் கூடாது... ஆர்பிஐ!

இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி கடன் செலுத்துபவர்கள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களிடமிருந்து பெரும் கடனில் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தும்போது, கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்த விதி 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஃபுளோட்டிங் ரேட் எனப்படும் மாறத் தக்க வட்டி விகிதத்தில் பெறப்படும் கடனுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் எனவும் கூறியுள்ளது. அதன்படி, தனிநபர்கள், வணிக நோக்கத்துகக்க அல்லாமல் பெறும் கடன்களுக்கும், வணிக நோக்கத்துடன் தனிநபர் அல்லது சிறு தொழில் நிறவனங்கள் பெறும் கடன்களை, முன்கூட்டியே அசல் தொகையை திருப்பிச் செலுத்தும்போது, அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.இந்த புதிய விதிமுறையானது 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் வழங்கப்படும் கடன்களுக்கும், ஏற்கனவே வாங்கி புதுப்பிக்கப்படும் கடன்களுக்கும் பொருந்தும்.
கடன் வழங்கும் பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிப் பணிகளை மேற்கொள்ளாத நிதி நிறுவனங்கள் என அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும். கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தினாலும், ஒரு பகுதியாக அசல் தொகையை திருப்பிச் செலுத்தினாலும் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு, வாடிக்கையாளர் எந்த நிதி ஆதாரத்தையும் காட்டத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!