“என் மீது அவதூறு பரப்பினால் விஷத்தை விழுங்குவேன்...” பிரதமர் மோடி ஆவேசம்!
பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அஸ்ஸாமில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது, தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும், அவதூறுகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். "என் மீது அவதூறு பரப்பினால், அந்த விஷத்தை நான் விழுங்குவேன், ஏனெனில் நான் சிவ பக்தன்" எனப் பேசியுள்ளார்.

அஸ்ஸாமில் உரையாற்றிய மோடி "மோடி மீண்டும் அழுகிறார் என்று காங்கிரஸ் கூறலாம், ஆனால் மக்கள் தான் என் கடவுள். அவர்கள் என் முன் தங்கள் வலியை வெளிப்படுத்தவில்லை என்றால் நான் எங்கு செல்வேன்? அவர்கள் தான் எனது குரு, எனது கடவுள், எல்லாமே"

"எனது தாயாரை வார்த்தைகளால் அவமதித்தார்கள். நான் ஒரு சிவ பக்தன். என் மீது பரப்பப்படும் வெறுப்பு என்ற விஷத்தை நான் விழுங்கி விடுவேன்" எனக் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை சமாளிக்கும் தனது பாணியை, சிவன் ஆலகால விஷத்தை விழுங்கிய நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
