வாக்களித்தால் நீங்க தான் ராஜா.. சிம்மாசனத்துடன் அசத்தும் வாக்குச்சாவடி.. உற்சாகத்தில் மக்கள்!

 
ஜில்லா பஞ்சாயத்து

கர்நாடகாவில் உள்ள ஷிமோகா ஜில்லா பஞ்சாயத்து, வாக்காளர்களுக்காக பிரமாண்டமான சிம்மாசனங்களைக் கொண்ட ஒரு வாக்குச் சாவடியைத் திறந்து  வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் குடிமக்களுக்கு இறுதி அதிகாரம் இருப்பதை மேற்கொள்காட்டி இதனை செயல்படுத்தி இருக்கின்றனர். மேலும் சிம்மாசனங்கள் வாக்காளர்கள் "ராஜாக்கள் மற்றும் ராணிகள்" என்ற கருத்தை அடையாளப்படுத்துவதாகும்.

வாக்குச் சாவடியில் வாக்களித்த பிறகு சிம்மாசனம் கிரீடம் அணிந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாக்களித்த பின் கிரீடம் வைத்து புகைப்பட்டம் எடுகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

28 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 14 இடங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி முடிவடைந்து மீதமுள்ள 14 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web