அடுத்த அஸ்திரம்... ‘மஞ்சுமல் பாய்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ்!

 
மஞ்சுமெல் பாய்ஸ்

காற்று எட்டு திசையிலும் வலம் வந்தாலும், இளையராஜாவின் இசை எட்டு திசைகளைத் தாண்டியும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதில் மாற்று கருத்து இல்லையென்றாலும் படத்திற்கு இசை பெரிதா? பாடல் பெரிதா? என்கிற சர்ச்சைகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது நம்மூர் பஞ்சாயத்துமட்டுமல்ல. மாநிலம் தாண்டியும் இளையராஜா தன் ஆளுமையை சட்டப்பூர்வமாக நிரூபிக்க போராடி வருகிறார்.

மஞ்சுமெல் பாய்ஸ்
ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு கொடைக்கானலுக்கு இந்த கோடை விடுமுறைக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கானோரை ஈர்த்த ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தில் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், படத்தின் தயாரிப்பாளருக்கு வக்கீல் நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ்
தன்னிடம் இது குறித்து முறையாக முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தன்னிடம் உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது படத்திலிருந்து அந்த பாடலை நீக்க வேண்டும் என்றும், படத்தில் தன்னுடைய பாடலைப் பயன்படுத்தியதற்காக தனக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை செய்ய தவறினால், தெரிந்தே தனது காப்புரிமையை பயன்படுத்தியதாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வக்கீல் நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!