’காப்பீடு திட்டம் வாங்கி தரேன்’.. மூதாட்டியிடம் நைசாக பேசி 6 சவரன் தங்க செயினை ஆட்டைய போட்ட மர்ம நபருக்கு வலைவீச்சு!

 
சுந்தரி

சென்னை குரோம்பேட்டை அன்னை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரி (63). இவர் குரோம்பேட்டையில் 10 ஆண்டுகளாக பூ விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பூ விற்று கிடைத்த பணத்தில் 6 சவரன் தங்க செயின் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூ வியாபாரம் செய்தபோது வலது உள்ளங்காலில் காயம் ஏற்பட்டது. மூதாட்டி சுந்தரிக்கு நீரிழிவு நோய் இருப்பதால் இரண்டு ஆண்டுகளாக குணமடையாமல் தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் நேற்று (ஜூன் 26) மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்து வீடு திரும்பும் போது 40 வயது மாற்றுத்திறனாளி ஒருவர்  சுந்தரியிடம் மருத்துவ காப்பீடு திட்டம் பெற்று தருவதாக கூறியதாக கூறப்படுகிறது. அப்போது சுந்தரி அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏற்கனவே பலமுறை பதிவு செய்தும் காப்பீடு திட்டம் வராததால், தற்போது காப்பீடு திட்டம் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து மர்ம நபரின் பேச்சை கேட்டதாக சுந்தரி கூறியுள்ளார்.  

அதன் அடிப்படையில் சுந்தரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மர்ம நபர், காப்பீடு திட்டம் வேண்டுமென்றால் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி கைப்பையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, மூதாட்டி சுந்தரியிடம் மர்ம நபர் சாதுர்யமாக பேசியதால், மூதாட்டியிடம் இருந்து பையில் இருந்த தங்கச் சங்கிலியை அந்த நபர் பறித்துக்கொண்டு அங்கிருந்து தந்திரமாக ஓடிவிட்டார். இந்நிலையில், ஏமாற்றப்பட்டதை அறிந்த அழுதுகொண்டே நின்ற மூதாட்டியை பார்த்து மருத்துவமனையில் இருந்தவர்கள் உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது நாடகமாடி மூதாட்டியிடம் தங்க செயின் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web