‘சாகுற வரைக்கும் இத நான் செஞ்சுக்கிட்டிருப்பேன்... ‘ மதுரை `விசிறித்' தாத்தா காலமானார்!

 
விசிறி தாத்தா

மதுரை சித்திரை திருவிழா எந்தளவுக்கு பிரசித்தி பெற்றதோ அதே போன்று, வழக்கமாக திருவிழா காண வருபவர்களுக்கு விசிறி தாத்தாவையும் தெரியும். 90யைக் கடந்த வயது. இருந்தாலும், சாகுற வரைக்கும் இந்த சேவையை நான் செஞ்சுக்கிட்டு தானிருப்பேன்’ என்று சொல்வார். மதுரையில் கோயில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு விசிறி விடும் தொண்டு செய்து வந்தவர் விசிறித் தாத்தா. விசிறி விடுவது என்றால் ஏதோ விளம்பரத்துக்காக கிடையாது. அடியார்க்கு செய்கிற சேவையைப் போல அதை முழு ஈடுபாட்டுடன் செய்து வந்த விசிறித் தாத்தா காலமானார்.

விசிறித் தாத்தா

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ மூர்த்தி. மதுரையில் இவர் செல்லாத கோவில்கள் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். சித்திரை திருவிழா முதல் அனைத்து கோயில்களுக்கும் வரும் பக்தர்களுக்கு விசிறி வீசி வந்துள்ளார் சுந்தர்ராஜ மூர்த்தி.
சித்திரை திருவிழா

நெடுந்தொலைவில் இருந்து இறைவனைக் காண வரும் பக்தர்களின் வியர்வை துளிகளை போக்குவதையே இறைத் தொண்டாக எடுத்துக் கொண்டு விசிறிவிடும் பணியை சுந்தர்ராஜ மூர்த்தி  தனது இறுதி மூச்சு நிற்கும் வரையில் செய்து வந்தார். இதனால் இவரை பக்தர்கள் அன்போடு விசிறித் தாத்தா என்று அழைத்து வந்தனர்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக விசிறித் தாத்தா சுந்தரராஜ மூர்த்தி நேற்று அதிகாலை காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து பக்தர்கள் வேதனை அடைந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web