பட்டாசு ஆலை வெடித்து பயங்கர விபத்து.. 9 பேர் பலி.. உரிமையாளர் தலைமறைவு!

 
பட்டாசு ஆலை

மேற்கு வங்க மாநிலத்தின் மேதினிபூர் மாவட்டத்திலுள்ள காதிகுல் கிராமத்தில் சட்டவிரோதமாக ஒரு பெரிய வீட்டிற்குள் பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள், மூலப்பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது. வீடும் தீக்கிரையானது.

பட்டாசு ஆலைபட்டாசு ஆலை

இந்த கோர விபத்தில் ஒன்பது பேர் பலியாகினர். தொடக்கத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஏழு பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 9 பேரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது. இந்த விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரும் இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

பட்டாசு ஆலை

எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது தெரியவந்தது. பல முறை ரெய்டு சென்றும், தொழிற்சாலை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் கிருஷ்ணபாதா பாக் என்பவர்தான் இந்த ஆலையை நடத்தி வந்துள்ளார். அவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வழக்கை குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2.5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக முதலமைச்சர் மம்தா அறிவித்தார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web