சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு... பெண் உட்பட 3 பேர் கைது!

 
பட்டாசு விபத்து

கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைசாமி தலைமையிலான போலீசார் ஆறுமுக நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அங்கு சட்ட விரோதமாக வாணவெடி தயாரிப்பது தெரிய வந்தது.

பட்டாசு ஆலை ரத்து

இது குறித்து, வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் ஆறுமுக நகர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் சண்முகசுந்தரம் (54), திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த சுவாமி மகன் செந்தில்குமார் (39), தென்காசி, குளகட்டாகுறிச்சியைச் சேர்ந்த முருகன் மனைவி செல்வி (50) ஆகியோர் சட்ட விரோதமாக பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஒரே நாளில் குவிந்த பட்டாசு குப்பைகள் இத்தனை டன்களா?!

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?