”மனைவியுடன் கள்ளத்தொடர்பு”.. ஆத்திரத்தில் காவலரின் ஆணுறுப்பை வெட்டிய கணவர்!

 
தெலங்கானாவில் காவலர்

மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த காவலரை மற்றொரு காவலர் தாக்கி ஆணுறப்பை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் குற்றத்தடுப்பு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை செய்து வருபவர் இப்தார் அகமத். அதே காவல் நிலையத்தில் சகுந்தலா என்பவர் காவலராக வேலை செய்து வருகிறார். சகுந்தலாவின் கணவர் ஜெகதீஷ் வேறொரு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்கிறார்.

இந்த நிலையில் கடந்த புதன் கிழமை இரவு காவல் ஆய்வாளர்  இப்தார் அகமத் அவருடைய காரில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கவனித்த உள்ளூர் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் காவல் ஆய்வாளர் இப்தார் அகமதை மீட்டு சிகிச்சைக்காக மகபூப் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் காவல் ஆய்வாளரின் உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் அவரை சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் ஜெகதீஷ் அவருடைய மனைவியான காவலர் சகுந்தலா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து காவல் ஆய்வாளர் இப்தார் அகமதை தாக்கியதாகவும் அப்போது ஜெகதீஷ் காவல் ஆய்வாளரின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

police sub inspector try to kill by constable in telangana state vel

மேலும் சகுந்தலா, இப்தார் அஹமத் ஆகியோருக்கு இடையே ரகசிய தொடர்பு இருந்ததும் இதனை கண்டித்த ஜெகதீஷ் சகுந்தலா மூலம் இப்தார் அஹமத்தை வரவழைத்து கடுமையாக தாக்கி அவருடைய ஆணுறுப்பை அறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜெகதீஷ், சகுந்தலா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web