’நான் ஒரு ஏலியன் தான்’.. பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!

 
எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க், பாரிஸில் நடந்த விவா டெக்னாலஜி நிகழ்வில் பேசினார். அப்போது, அவர் வேற்றுகிரகவாசி போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். எலோன் மஸ்க் சிரித்துக்கொண்டே, "நான் ஒரு வேற்றுகிரகவாசி தான். நான் இதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை" என்று கிண்டலாக பதிலளித்தார்.

 எலன் மஸ்க்

பூமியில் வேற்றுகிரகவாசிகள் பற்றிய விவாதம் பற்றி பேசுகையில், "ஏலியன்கள் பூமியில் இருப்பதாக நினைக்கிறார்கள் என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள், நான் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை, ஆதாரம் கிடைத்தால், அதை எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறேன்" என்று கூறினார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் ஆய்வு மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித வசிப்பிடத்திற்கான தேடல் குறித்தும் பேசினார். "SpaceX இன் நீண்ட கால இலக்கு, மனிதர்கள் பல கிரகங்களில் வாழ்வதே ஆகும். நாம் ஒரு நிலையான பல்கோள் நாகரிகமாக மாற வேண்டும். அது சாத்தியமாகும்போது, பூமியின் வரலாற்றில் இது முதல் முறையாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web