’நான் தான் காதலனாக நடிப்பேன்’.. ஷாருக்கான் ஆசையும்.. சானியா மிர்சாவின் பதிலும்!

 
சானியா மிர்சா

சானியா மிர்சா இந்திய டென்னிஸின்  பொக்கிசம் என்றே சொல்லலாம். உலகளவில் பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்களுடன் டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். பல இளம் பெண்களை விளையாட்டுத் துறையில் சாதிக்கத் தூண்டும் ஐ-கானாகத் திகழ்கிறார். சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் 2010 இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் துபாயில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். 

இந்நிலையில் தான் சமீபகாலமாக சானியா மிர்சா தனது கணவரை விட்டு விலகியிருந்தார். இதற்கிடையில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின. அதே சமயம் இது குறித்து இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மறுபுறம், பிரபல பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் சோயப் மாலிக் நட்பு இருப்பதாக செய்திகள் வந்தன. விவாகரத்தை மறைமுகமாக உறுதிப்படுத்திய இரு தரப்பிலிருந்தும் இன்ஸ்டாகிராம் பதிவுகளால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

அப்போது சோயப் மாலிக், சனா ஜாவேத் என்பவரை காதலிப்பதாக கூறப்பட்டு திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சானியா மிர்சாவின் தந்தை கூறுகையில், சானியா மிர்சா இஸ்லாமிய முறைப்படி சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து கொண்டதாக தெரிவித்தார். இந்நிலையில் தான், பிரபலமான ஹிந்தி டிவி நிகழ்ச்சியான தி கிரேட் கேபி ஷோ இப்போது நெட்ஃபிக்ஸ் இல் வெளியாகி உள்ளது. இந்திய விளையாட்டு வீரங்கனைகளான சானியா மிர்சா, மேரி கோம், சைனா நேவால், ஸிப்த்  கா சாம்ரா மற்றும் பலர் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

சானியா மிர்சா

விவாகரத்துக்குப் பிறகு சானியா மிர்சாவின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியில் சானியா மிர்சா தனது தனிப்பட்ட வாழ்க்கை உட்பட பல விஷயங்களை கலகலப்பாக பேசியுள்ளார். நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கபில் சர்மா, ஷாருக்கான் முன்பு ஒருமுறை தெரிவித்திருந்த ஒரு விருப்பத்தை சானியாவிடம் சுட்டிக்காட்டினார். சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் காதலனாக நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் ஷாருக்கான். இதற்கு பதிலளித்த சானியா மிர்சா, அதற்கு நான் முதலில் காதலை தேட வேண்டும் என கூறியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web