தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரனார் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
விளாத்திகுளத்தில் தேவேந்திர குலவேளாளர் நலச்சங்கம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக போராடிய சமூக நீதிப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பாப்பா பாண்டியன் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தேவேந்திர வேளாளர் நல சங்க அலுவலகத்தில் வைத்து, இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவில், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள், அரசியல் கட்சியினர் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
