சபரிமலையில் உடனடி முன்பதிவு ரத்து... புதிய கட்டுப்பாடுகள் அமல்!

 
சபரிமலை

 சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப் பிரசித்திப் பெற்றது.  சபரிமலை மாதாந்திர பூஜை, மண்டல, மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்படும். விழாக்காலங்களில் சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக  ஆன்லைனிலும், உடனடி முன்பதிவு கவுண்டர்களிலும் தினமும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் முன்பதிவு செய்ய வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  2024 ல் மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் முன்பதிவு எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

சபரிமலை


அதன்படி தினசரி ஆன்லைன் முன்பதிவு 80000 ஆக  குறைக்கப்பட்டது. உடனடி முன்பதிவும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.  இந்நிலையில்  மண்டல சீசன் முதல் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக உடனடி முன்பதிவு வசதியை ரத்து செய்யப்படும் என தேவசம்போர்டு  தீர்மானித்துள்ளது.  அதன்படி தினசரி ஆன்லைன் முன்பதிவு 80000  வரை மட்டுமே என புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web