கனடாவில் உண்ணாவிரத போரட்டத்தை இடைநிறுத்தம் செய்த இந்திய மாணவர்கள்!

 
கனடா இந்திய மாணவர்கள்

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் குடியேற்ற சட்ட திருத்ததில் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல இந்திய மாணவர்கள் மே 24 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரண்டு வாரங்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மாகாண  அலுவலக பணிப்பாளர் ஜெஃப் யங் மாணவர்களை சந்தித்துள்ளார்.

ஜெஃப் யங்கின் சந்திப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.மாணவர்களில் ஒருவரான ருபிந்தர் பால் சிங் கூறுகையில், மாணவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்கும் போது உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு ஜெஃப் யங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உண்ணாவிரதத்தை இடைநிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றும், நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார். இதனிடையே, உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் சிலர், கடந்த செவ்வாய்க்கிழமை திரவ உணவு உட்கொள்வதை நிறுத்தியதால், சிலரது உடல்நிலை மோசமடைந்தது. அதிகாரிகள் அவர்களைச் சந்தித்தபோது மாணவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web