+2 மாணவர்களுக்கு முக்கிய செய்தி... இன்றே கடைசி தேதி... ஜூலை 10ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

 
தமிழில் பொறியியல் படிப்புக்கள்?!
இன்று கடைசி தேதி... இதுவரை அப்ளை பண்ணாமல் இருந்தால் உடனே என்ஜினியரீங் படிப்புகளில் சேர்வதற்கு உங்களுடைய விண்ணப்பத்தை சப்மிட் பண்ணிடுங்க. அதற்கு முன்பாக எந்த பாட பிரிவு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒருமுறைக்கு இருமுறையாக செக் பண்ணிக்கோங்க. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இதுவரை 2.35 லட்சம் பேர் விண்ணப்பங்களைப் பதிவு செய்திருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் 2024-25 ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு! செப்டம்பர் 14ல் தரவரிசைப் பட்டியல்!

அதன்படி, இதுவரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 709 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பப் பதிவு செய்துள்ள 2 லட்சத்து 35 ஆயிரத்து 709 பேரில், 1 லட்சத்து 87 ஆயிரத்து 517 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 38 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பப் பதிவை நிறைவு செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கலந்தாய்வு

இன்று ஜூன் 6ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகும். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு வருகிற ஜூன் 12ம் தேதி (புதன்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 12ம் தேதியன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, 13-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. தரவரிசைப் பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web