15 நாட்களில் தவெக கட்சிக்கொடி, மாநாடு தேதி அறிவிப்பு... தொண்டர்கள் உற்சாகம்!

 
விஜய் மக்கள் இயக்கம்


 தமிழகத்தில் இளைய தளபதியாக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். 2026 தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்

 இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.கட்சிக் கொடியை பொறுத்தவரை கொள்கையின் அடிப்படையில் 3  வண்ணங்களில்  கொடி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்

கொடி அறிமுகம் செய்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்ற அனுமதி அளிக்கப்படும். கொடி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மாநாடு நடத்துவது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. விஜய் ரசிகர்கள் , தவெக தொண்டர்கள் இந்த அறிவிப்பால் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web