தென் தமிழகத்தில் இவங்களுக்கெல்லாம் அமைச்சராகும் வாய்ப்பு... லிஸ்ட் தயார்!

 
அண்ணாமலை மோடி

 இந்தியாவில் நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில்  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து நாளை ஜூன் 9ம் தேதி இரவு 8 மணிக்கு 3 வது முறையாக மோடி  பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள துப்புரவு பணியாளர்கள், திருநங்கைகள், வந்தே பாரத் ரயில்களின் நிர்வாகப் பணியாளர்கள் உட்பட உலகம் முழுவதும் 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மோடி
தமிழகத்தை  பொறுத்தவரை  அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன் உட்பட  தென்மாநிலங்களில் இருந்து 14 பேர் பாஜக சார்பில் மத்திய அமைச்சராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆந்திராவில் பாஜக சார்பில் புரந்தேஸ்வரியும், கேரளாவில் வென்ற நடிகர் சுரேஷ் கோபியும் மத்திய அமைச்சராகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மோடி ஐஸ்வர்யா மேனன்
 அதே போல் தெலங்கானாவில் கிஷண் ரெட்டி, ஏடலா ராஜேந்தர், டி.கே. அருணா, டி அரவிந்த் பன்டி விஜய் ஆகியோரும்  அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. கர்நாடகாவில்  பிரஹலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, கோவிந்த் கர்ஜோல், பி.சி.மோகன் அமைச்சராகக் கூடும். ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்யானந்த் ராய், சர்பானந்த சோனோவால் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக தொடரலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web