நள்ளிரவில் ஆவின் பாலகத்தை பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!

 
தென்மாதிமங்கலம் ஆவின்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெயமோகன் என்பவர் தமிழ்நாடு அரசு மூலம் ஆவின் முகவராக ஒப்பந்தம் பெற்று ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பணிகளை முடித்து  கடையை மூடிவிட்டு சென்றுள்ளார் ஜெயமோகன்.  சுமார் 11 மணிக்கு மேலாக ஆவின் பாலகத்தில் இருந்து புகை வெளிவருவதை கண்டு   அருகில் இருந்தவர்கள் உடனடியாக  தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறையினர் வருவதற்குள் சிலிண்டர் வெடித்து தீ மலை மல மலவென பற்றி எரிந்து ஆவின் பாலகத்தில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகி உள்ளன.பின்னர் ஜெயமோகன் கடலாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள் மீது புகார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்மாதிமங்கலம் பேருந்து நிலையம் அருகே காவல் உதவி மையம் அலுவலகம் எதிரே பெட்ரோல் ஊற்றி ஆவின் பாலகத்தை எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி

From around the web