நடுரோட்டில் ரகளை... போதையில் போலீசாரை தாக்கிய ரவுடிகள்!
தமிழகம் முழுவதுமே போதை கலாசாரம் சமீபமாக அதிகரித்து வருகிறது. போதைபொருட்கள் ஆங்காங்கே பிடிபடுவதும், கிலோ கணக்கில் கடத்திச் செல்லப்படுவதும் ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு புறம் மதுபோதைக்கும் பலரும் அடிமையாகி வருகிறார்கள்.
இந்நிலையில், சேலத்தில் மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு பணியில் இருந்த போலீசாரை 4 ரவுடிகள் தாக்கி அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
சேலம், பொன்னம்மாபேட்டை அருகே தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம். அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துக் கொண்டிருந்த இவர், தனது கூட்டாளிகள் 3 பேருடன், நேற்று மதுபோதையில் சின்னத்திருப்பதியில் இருந்து தனது காரில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது டிஎம்எஸ் பகுதி அருகே சாலையில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த பிரகாசம் தரப்பு, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைத் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவலர்கள், பிரகாசத்தின் காரை நிறுத்தியபோது மது போதையில் இருந்த நால்வரும் சேர்ந்து போலீசார் தாக்கியுள்ளனர். மேலும் போதையில் தகராறு செய்த இளைஞர்களைத் தடுக்க முயன்ற வாகன ஓட்டிகளையும் போதை இளைஞர்கள் தகாத வார்த்தையால் திட்டி சரமாரியாக தாக்கினர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து மது போதையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பணியில் இருந்த போக்குவரத்து காவலரை தாக்கிய 4 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் போக்குவரத்து நெரிசலை போலீசார் சீர் செய்தனர். நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
