நாடாளுமன்ற தேர்தலில் வைகோ மகன்... ஆசைய காத்துல தூது விட்டு பேச்சு!

 
வைகோ

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவிற்கு கட்டியா வயல் பகுதியில் மதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ...

கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மார்க் விவகாரம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு தஞ்சை ஆகிய சம்பவங்கள் தமிழக அரசுக்கு ஒரு படிப்பினை இதனை படிப்படியாக கொண்டு தமிழக அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டணியில் இருந்தாலும் மதிமுக இதனை கடுமையாக எதிர்க்கிறது, தீவிரவாதிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் சயனைடு தற்போது மருத்துவ பயன்பாடுகள் உள்ளிட்டவைகளுக்கும் தாராளமாக கிடைக்கிறது. இதற்காக செந்தில் பாலாஜி பதவி விலக கூறுவது என்பது தவறான முன்னுதாரணம்

துரை வைகோ

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்தில் 130 பேர் பலியானவர்களே அப்போது குஜராத் அமைச்சர் ராஜினாமா செய்தாரா என எதிர்கேள்வி கேட்டார், அதிமுக அவைத்தலைவர் மீண்டும் அவரை தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து கட்சி உயர்மட்ட குழு தான் முடிவு செய்யும் 2000 ரூபாய் நோட்டை முதலில் ஒன்றிய அரசு கொண்டு வந்ததே தவறு

கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மார்க் விவகாரம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு தஞ்சை ஆகிய சம்பவங்கள் தமிழக அரசுக்கு ஒரு படிப்பினை என்றதோடு அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கும் பெரிய படிப்பினை. இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கள்ளச்சாராயத்தால் மரணங்கள் நிகழ்ந்தால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கினாலும் தப்பில்லை என்றார்.

துரை வைகோ

கூட்டணியில் இருந்தாலும் மதிமுக இதனை கடுமையாக எதிர்க்கிறது. டாஸ்மார்க் கடை திறப்பதற்கு முன்பாகவே 24 மணி நேரமும் மதுக் கூடங்களில் மது விற்பனை என்பது நடைபெற்று வருவது என்பதை மறுப்பதற்கு இல்லை இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றவர்,

மதிமுகவில் அடிப்படை தொண்டனாக இருப்பதற்கு தான் நான் விருப்பப்படுகிறேன். ஆனால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முடிவு எப்படி உள்ளது என்பதை அறிந்து தேர்தலில் நிற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web