தவெக ஜூன் 28ம் தேதி 10 , 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!

 
விஜய் மாணவிகள்

 தமிழ் திரையுலகின் இளையதளபதி நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் தவெக கட்சியை தொடங்கியுள்ளார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என அறிவித்திருந்த நிலையில் மாநில கட்சியாக தவெகவை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. தற்போது  தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் “தளபதி விஜய்” 2023-02024 கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத் தேர்வில்   தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் “தமிழக வெற்றிக் கழகம்” சார்பாகப் பாராட்ட உள்ளார்.

விஜய்
இதன் முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை  சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர்  மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டுக்களை பெற உள்ளனர்.  

விஜய்
அதனைத் தொடர்ந்து 2ம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை  செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். "தளபதி விஜய்”  மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என  தெரிவித்துக்கொள்கிறேன் என புஸ்ஸி ஆனந்த் பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web