வரி ஏய்ப்பு செய்ததாக 3 நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!
திண்டுக்கல்லில் 75 வருடங்களுக்கு மேலாக மேற்கு ரத வீதியில் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர்கள் தினேஷ் மற்றும் அவரது தம்பி தீரேஜ். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு நகைக்கடை திண்டுக்கல் RS சாலையில் செயல்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரத்திலும் மற்றொரு கிளை நகைக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று ஜனவரி 3ம் தேதி பிற்பகலுக்கு மேல் தினேஷ் மற்றும் தீரஜ்க்கு சொந்தமான மூன்று நகைக்கடைகள் மற்றும் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தினேஷ் மற்றும் அவரது தம்பி தீரேஜ் வீடுகளில் 6 கார்களில் வருகை தந்த 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நகைக்கடையின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாகவே தற்போது வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருவதாகவும், மேலும் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இரவு முழுவதும் சோதனை தொடர்ந்த நிலையில் 2 வது நாளாக இன்றும் 04.01.25 கடைகள் மற்றும் வீடுகள் என 5 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!