அதிகாலையில் பரபரப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் தீவிர சோதனை... வன்முறையில் இறங்கிய ஆதரவாளர்கள்!

 
செந்தில்பாலாஜி

தமிழகத்தின்  மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இதன் அடிப்படையில் இன்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத் உட்பட  பல இடங்களில் சோதனை நடைபெற்ற வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, கரூர் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை பரபரக்கும் நிலையில்  வருமான வரித்துறை அதிகாரிகளை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியை ஜாக்கியால் குத்தி உடைத்துச் சேதப்படுத்தினர். செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.இவர் கடந்த ஆட்சியில்  போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் ரூ40 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

செந்தில் பாலாஜி
இந்நிலையில்  கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உட்பட திமுக நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர். அத்துடன் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருவதால் மேயர் கவிதா கணேசன் தலைமையில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மே 29ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
  செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் உள்ளது. இந்த வழக்கின் மீது விசாரனை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ஆளுங்கட்சி அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web