உலகம் முழுவதும் பெண் சிஇஓக்கள் அதிகரிப்பு!

 
பெண் சி இஓ

 உலகம் முழுவதும் அமைந்துள்ள பல்வேறி முன்னணி நிறுவனங்களில்  அதிக சம்பளம் பெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகள் சிஇஓ பட்டியலை ஈகுலர் நிறுவனத்துடன் இணைந்து அசோசியேட் பிரஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.  பெண் சிஇஓக்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
 2011ல்  நடத்தப்பட்ட  ஆய்வில் முதல் முறையாக 25 பெண் சிஇஓக்கள் இடம் பெற்று இருந்தனர்.  2017ல் 21 பெண் சிஇஓக்கள் இடம் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

பெண் சிஇஓ

இவர்களில், அமெரிக்காவின் சிப் தயாரிப்பு நிறுவனமான அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் குழுமத்தின் சிஇஓ லிசா சூ, மொத்த ஆண்டு சம்பளம் 30.3 மில்லியன் டாலருடன் (ரூ.251.5 கோடி) முதல் இடத்தில் உள்ளார்.  கடந்த 5 ஆண்டாக உலகின் அதிக சம்பளம் பெறும் பெண் சிஇஓ இவர் மட்டும் தான். ஒட்டுமொத்த சிஇஓக்கள் பட்டியலில் இவர் 25வது இடத்தில் இருந்து 21வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.  அதே நேரத்தில் ஆண் சிஇஓக்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.  

அதிக சம்பளம் பெறும் சிஇஓக்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பிராட்காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாக் டான். இவரின்  ஆண்டு சம்பளம் 161.8 மில்லியன் டாலர் ரூ.1,343 கோடி. எனவே சம்பள விஷயத்தை பொறுத்தவரை  பெண் சிஇஓக்கள் ஆண்களை பின்னுக்கு தள்ள இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்கின்றனர் தொழிலதிபர்கள்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web