நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!! இப்பவே ரேஷன் கடைக்கு போயிட்டு வந்திடுங்க!!

 
ரேஷன்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் உணவு தானியங்கள் மானிய விலைக்கு  விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற  வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் அடிப்படையில் நாளை ஜூன் 14ம் தேதி  புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உத்தேசித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் அந்த மாவட்ட தலைவர் மாயவன், செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார், மாநில அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

நியாய விலை கடை

அப்போது, பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்குக, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் நாளை புதன்கிழமை முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் 3 துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் 3 துறையை சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே பொதுவினியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். 

நியாய விலை கடை

எங்களது 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை  முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக கூறினார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web