சென்னை கோட்டையில் சுதந்திர தின ஏற்பாடுகள் தீவிரம்... ஆகஸ்ட் 15ல் முதல்வர் தேசியக் கொடியேற்றுகிறார்!

 
தேசிய கொடியேற்றுகிறார் ஸ்டாலின்

இந்​தி​யா​வின் 79-வது சுதந்​திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி விமரிசை​யாக கொண்​டாடப்​படுவதை முன்னிட்டு சென்​னை​யில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்து 5-வது ஆண்​டாக தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து உரை​யாற்​றுகிறார்.

சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, சென்​னை​யில் விழா நடை​பெறும் புனித ஜார்ஜ் கோட்​டை, விமான நிலை​யம் உட்பட பல்​வேறு பகு​தி​களி​லும் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. முன்​ன​தாக, முப்​படை, காவல் துறை உள்​ளிட்ட பல்​வேறு பிரி​வினரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​கிறார். தொடர்ந்து நடை பெறும் நிகழ்ச்​சி​யில், ஐயுஎம்​எல் தேசி​யத் தலை​வர் காதர் மொய்​தீனுக்கு 'தகை​சால் தமிழர்' விருதை வழங்​குகிறார். இதுத​விர, கல்​பனா சாவ்லா விருது, வீரதீர செயலுக்​கான விருது உள்​ளிட்ட விருதுகள், பதக்​கங்​களை வழங்​கு​கிறார்.

 ஸ்டாலின்

சுதந்திர தின விழா நடை​பெறும் ஜார்ஜ் கோட்டை மற்​றும் அதை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்டு வருகிறது. 9,000 போலீ​ஸார் பாது​காப்​பு, கண்​காணிப்பு பணி​யில் ஈடுபட உள்​ளனர். முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, சென்னை விமான நிலை​யம், ரயில் நிலை​யங்​கள், பேருந்து முனை​யங்​கள், வணிக வளாகங்​கள், கடற்​கரை பகு​தி​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் இதர முக்​கிய இடங்​களில் சோதனை, கண்​காணிப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. தங்​கும் விடு​தி​கள், ஹோட்​டல்​களில் தீவிர சோதனை நடத்​தப்​படு​கிறது.

சந்​தேக நபர்​களின் நடமாட்​டம் குறித்து தகவல் தெரிந்​தால், காவல் துறைக்கு தெரிவிக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. முக்​கிய​மான இடங்​களில் தடுப்​பு​கள் அமைத்து போலீசாஸார் வாக​னத் தணிக்கை நடத்தி வரு​கின்​றனர். சென்னை விமான நிலை​யத்​துக்கு சமீப​கால​மாக அடிக்​கடி குண்டு மிரட்​டல்​கள் வரு​வ​தால், 3 அடுக்கு பாது​காப்பு அமலில் உள்​ளது. சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, வரும் 20-ம் தேதி நள்​ளிரவு வரை 5 அடுக்கு பாது​காப்​பாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

ஸ்டாலின்

விமானப் பயணி​கள் திர​வப் பொருட்​கள், ஊறு​காய், அல்​வா, ஜாம், எண்​ணெய் பாட்​டில்​கள் போன்​றவற்றை எடுத்​துச் செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. சோதனை நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ள​தால், உள்​நாட்டு பயணி​கள், விமானம் புறப்படும் நேரத்​துக்கு ஒன்​றரை மணி நேரம் முன்​ன​தாக​வும், சர்வ​தேச பயணி​கள் மூன்​றரை மணி நேரத்​துக்கு முன்​ன​தாக​வும், விமான நிலை​யத்​துக்கு வரு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, முதல்​வர் பங்​கேற்​கும் சுதந்​திர தின விழாவுக்​கான முதல்​கட்ட ஒத்​திகை நிகழ்ச்சி மூன்றாம் கட்டமாக நாளை நடைபெறுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?