2வது டெஸ்ட் .... இந்தியா பேட்டிங், இங்கிலாந்து பவுலிங்!

 
இந்தியா இங்கிலாந்து
 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்  முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று முடிந்துள்ளது.  இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.   5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

 இந்தியா

இதனால் ரசிகர்கள் இந்த போட்டியிலாவது இந்தியா வெற்றிக்கனியை எட்டுமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில்  தொடங்கியுள்ளது.  இதையொட்டி இரு அணியினரும் சில நாட்களாக  தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வந்தனர். 

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்

இந்த போட்டியில் பும்ரா ஆடுவதில் சந்தேகம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்ட நிலையில்  இந்த டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?