மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய இந்தியா சதியா?! வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!

 
அப்துல்லா கலீல்

அண்டை நாடான மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா கலீல் மூன்று நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்திருந்தார். இந்தப் பயணத்தின் போது ​​இந்தியாவின் நிதியுதவி மூலம் மாலத்தீவில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் மூன்றாம் கட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) இருதரப்பும் கையெழுத்திட்டன.

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மையின் கூட்டுப் பார்வையை நனவாக்க, இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு மாலத்தீவு அதிபர் முகமது மோர்சி உறுதி பூண்டுள்ளதாக அப்துல்லா கலீல் கூறினார். 

பின்னர் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு உள்ளூர் கரன்சிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இரு தரப்பினரும் ஒரு கட்டமைப்பில் கையெழுத்திட்டுள்ளனர். பல்வேறு துறைகளில் எங்களது உறவுகளை பலப்படுத்தியுள்ளோம்.

இந்தியா எப்போதும் மாலத்தீவை ஆதரிக்கும். அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொடுக்கும் மத்திய அரசின் கொள்கையின் வலுவான வெளிப்பாடாக மாலத்தீவு உள்ளது. இதனிடையே, அதிபர் முகமது முய்சுவை பதவியில் இருந்து நீக்க 40 எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்க அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இந்தியாவிடம் ரூ.50 கோடி கேட்டதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும் போது, ​​“பத்திரிகை மற்றும் நிருபரின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மை இல்லை என்பதே மத்திய அரசின் கருத்து.

சீன ஆதரவாளராகக் கருதப்படும் முகமது முய்சு, 2023ல் மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றார். இந்நிலையில், இந்தியாவால் வழங்கப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் கடல் ரோந்து விமானங்களை இயக்கி, பராமரித்து வரும் இந்திய ராணுவ வீரர்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அதிபர் முய்சு மத்திய அரசை வலியுறுத்தினார். 

அதன்படி வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். இதனால் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபரில் முய்சு இந்தியா வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டன. "இந்தியா-மாலத்தீவு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும்" என்று முய்சு உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web