பதிலடி கொடுக்குமா இந்தியா?.... இங்கிலாந்துடன் 4 வது டெஸ்ட் இன்று தொடக்கம்!

 
இந்தியா இங்கிலாந்து

 இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இன்று  இரு நாடுகளுக்கு  இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.  லார்ட்சில் நடைபெற்ற பரபரப்பான 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்தது.  இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு.இதனால்  இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இந்தியாவை 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி த்ரில் வெற்றி பெற்றது.தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய டெஸ்டில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலை.

இங்கிலாந்து டெஸ்ட்

இதனால்  கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மான்செஸ்டரில் இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக இதுவரை தோற்றதில்லை. 9 டெஸ்டில் விளையாடி 4-ல் வெற்றியும், 5-ல் டிராவும் கண்டுள்ளது. அந்த 89 ஆண்டு கால பெருமையை தக்கவைக்க தீவிரமாக களமிறங்க உள்ளது.  
4-வது டெஸ்ட் நடக்க உள்ள மான்செஸ்டரில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அத்துடன் ஆடுகளமும் ஈரமாக இருப்பதால் இத்தகைய சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்கள் பந்தை நன்கு கணித்து எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். இல்லாவிட்டால் தாக்குப்பிடிப்பது கடினம் தான். மொத்தத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து மான்செஸ்டரின் மோசமான வரலாற்றை இந்திய அணி மாற்றிக்காட்டுமா அல்லது இங்கிலாந்தின் யுக்தியை சமாளிக்க முடியாமல் அடங்கி போகுமா? என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

 இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம்:
இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், கருண் நாயர் அல்லது சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், அன்ஜூல் கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா. 


இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி சுமித், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?