உலகில் அதிகளவில் மதுபான நுகர்வு நாடாக இந்தியா வெளிப்பாடு!

 
மது

உலகளவில் மதுபான நுகர்வு அதிகரித்து வருவதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 20 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதுபான சந்தை வளர்ச்சி குறித்து செய்யப்பட்ட சர்வதேச ஆய்வில், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து மிகுந்த வளர்ச்சி காணும் நாடாகத் திகழ்கிறது.

கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபான நுகர்வு 7 சதவீத அளவில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த காலத்தில் நாடு முழுவதும் சுமார் 44 கோடி லிட்டர் மதுபானம் விற்று நுகரிக்கப்பட்டுள்ளது. அதில் விஸ்கி விற்பனை 7 சதவீதம், வோட்கா 10 சதவீதம், ரம் 2 சதவீதம், ஜின் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

டாஸ்மாக்

இது தொடர்பாக நிபுணர்கள் தெரிவிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மது வகைகள் தரத்திலும், விலையில் பொதுமக்களுக்கு ஏற்றவண்ணம் இருப்பதும் காரணமாக நுகர்வோர் வட்டாரம் விரிவடைகிறது. நகரப் பகுதிகளையேன்றி, கிராமப் பகுதிகளிலும் கூட மதுப் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது சீனா, அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகியவை உலகின் மிகப் பெரிய மதுபான சந்தை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தற்போதைய வளர்ச்சி தொடர்ந்தால், 2027 ஆம் ஆண்டில் இந்தியா ஜப்பானை முந்தி, 2033 ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியையும் கடந்துவிட்டு உலகின் முன்னணி ஐந்து மதுபான சந்தைகளில் ஒன்றாக மாறும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

போதை டாஸ்மாக்

மதுப்பழக்கம் அதிகரிப்பது சமூக மற்றும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சூழலில் இந்த வளர்ச்சி சிந்திக்க வைக்கும் தரப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மது நுகர்வின் விரிவு தொடர்பான கட்டுப்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மேலும் கவனம் செலுத்தத் தேவை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க