5 ஸ்டார் ஹோட்டலில் இந்தியா அம்மாவின் சேட்டைகள்.. வீடியோ வைரல்!

 
அட்லாண்டிஸ்

இந்தியப் பெண்மணி பல்லவி வெங்கடேஷ் தனது விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் துபாய்க்குச் சென்றார், அங்கு அவர் அட்லாண்டிஸ், தி பால்ம், என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். இந்நிலையில், பல்லவி வெங்கடேஷ் தனது அறையின் பால்கனியில் துணிகளை உலர்த்தியுள்ளார். அதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட வீடியோவில், பல்லவியின் தாய் கடற்கரை ரிசார்ட்டில் உள்ள அவர்களின் அறையின் பால்கனியில் துணிகளை உலர்த்துவதை நாம் காணலாம். மேலும், "அட்லாண்டிஸிலும் அம்மா எப்போவும் அம்மா தான் " என்று வீடியோவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, ஹோட்டல் பதிவில் கருத்து தெரிவித்துள்ளது. அந்த கருத்தில், “ஒரு தாயின் கடமைகளை நாங்கள் பாராட்டுகிறோம். உங்கள் விடுமுறையை நீங்கள் அனுபவித்து மகிழ்கிறீர்கள் என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு குளியலறையிலும் ஒரு உட்புற துணி உலர்த்தியை வழங்கியுள்ளோம். எனவே நீங்கள் உங்கள் துணிகளை அங்கேயே உலர வைக்கலாம்." மேலும், பல்லவி வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த சிலர் கமெண்ட்களில் அவரை விமர்சித்து வந்தாலும், இன்னும் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web