பைனலுக்கு முன்னேறிய இந்தியா... ஷமியின் வலையில் வீழ்ந்த நியூசிலாந்து..!!

 
ind

அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதலாவதாக முன்னேறியுள்ளது. மீதம் உள்ள தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளில் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  ஷமியின் அபார பந்து வீச்சால் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியுள்ளது.

ind

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 41 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி சதமடித்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் முறையே 117 ரன்கள் மற்றும் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சுப்மன் கில் மீண்டும் களமிறங்கினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 39 ரன்களுடனும் சுப்மன் கில் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கனே வில்லியம்சன் 69 ரன்களில் வெளியேறினார். அந்த அணியின் டேரைல் மிட்செல் அதிக அளவாக 134 ரன்களை சேர்த்துள்ளார். அவற்றில் 7 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும்.

ind vs nz

கிளென் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்துள்ளார். அவரை தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்தியாவின் வெற்றியால், நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில், பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web