கொல்கத்தா டெஸ்டில் இந்தியா 189 ரன்களுக்கு ஆல் அவுட்!
கொல்கத்தாவில் நேற்று தொடங்கிய இந்தியா–தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் முற்றிலும் பந்துவீச்சு ஆதிக்கத்தைச் சந்தித்து வருகின்றன. பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு மட்டுமே சரிந்தது. பதிலடியாக களமிறங்கிய இந்தியாவும் இன்று 189 ரன்களில் ஆல் அவுட் ஆகியது.
இந்தியா சார்பில் கே.எல். ராகுல் 39 ரன்களுடன் அதிகபட்ச ஸ்கோராக இருந்தார். இன்னொரு புறம், கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக பாதியிலேயே ரிட்டயர்ட்டாக வெளியேறியதால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் ஹார்மர் 4 விக்கெட்டுகள், யான்சென் 3, மகாராஜ் மற்றும் போஷ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தற்போது தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து விளையாடி வருகிறது. தேநீர் இடைவேளை வரை 6.4 ஓவர்களில் 18/1 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 3 ரன்களுடன் க்ரீஸில் உள்ளார். ரியான் ரிக்கெல்டனின் விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா தற்போது 12 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
