இந்தியாவுக்கு மேலும் வரி உயர்த்தப்படும்... அதிபர் ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார். இந்த நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்திருப்பதாக அறிவித்திருந்தார் . இது குறித்து அவர் தனது Truth Social தளத்தில், இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் கூடுதல் அபராதமாக இந்த வரியை விதிப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதனை “நியாயமற்றது” என விமர்சித்துள்ளது. மேலும், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகவில்லை, வரி உயர்வு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷியாவிடமிருந்து வாங்கும் எண்ணெயை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு இந்தியா விற்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் போர் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை இந்தியாவின் நடவடிக்கைக்காகவே அதன் மீதான வரியை உயர்த்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் பேசுகையில், ”அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை கணிசமாக உயர்த்துவேன், இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும் பகுதியை திறந்த சந்தையில் பெரிய லாபத்திற்கு விற்பனை செய்து வருகிறது. உக்ரைன் – ரஷ்ய போரில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை” எனக் கூறியுள்ளார்.

இந்த வரி மிரட்டல்களுக்கு எதிராக, பிரதமர் மோடி இந்தியாவில் மக்கள் உள்ளூர்ப் பொருட்களை வாங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த அரசு இதுவரை எந்தவொரு உத்தரவும் வழங்கவில்லை, வாங்குவதை நிறுத்த வேண்டுமா என்ற முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
