உலகக் கோப்பை வில் வித்தை போட்டி: 3 தங்கம் வென்று இந்தியா சாதனை!
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக 3 தங்கப்பதக்கங்களை பெற்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணிகள் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று தங்களது பதக்க கணக்கை வெற்றியுடன் துவங்கியுள்ளனர்.
ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது. அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ஆகிய மூவரும் அடங்கிய ஆண்கள் அணி நெதர்லாந்தின் அணியை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா/ ஜோதி சுரேகா கூட்டணி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர். ரீகர்வ் பதக்க சுற்றுகள் நாளை நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா வெல்லும் என எதிர்பாரக்கப்படுகிறது
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!