மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி... ஹாக்கியில் இந்தியா அசத்தல் வெற்றி!!

 
ஹாக்கி இந்தியா

மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டிகள் அக்டோபர் 27 முதல்  ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில்  நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து  என  6 அணிகள்  கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.  சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டி நவம்பர் 5-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஹாக்கி இந்தியா


இந்த போட்டிகளில்  இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டு தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற  லீக் போட்டியில் இந்தியா 2-1 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நடப்பு சாம்பியனான ஜப்பானை நேற்று இரவு   எதிர்கொண்டது.  இந்தப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியில், நவ்னீத் கவுர் ,  சங்கீதா குமாரி கோல் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டியில் தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஹாக்கி இந்தியா

இதன் மூலம்  இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பான் ஹாக்கி மகளிர் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 9 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.  இந்திய அணி ஏற்கனவே அரை இறுதியை எட்டிவிட்ட நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவுடன்  நாளை  மோத உள்ளது  குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web