இந்தியா சாதனை... மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்றது இந்தியா!

 
ஹாக்கி மகளிர் ஆசிய கோப்பை

இன்று ஜப்பானின் ககாமிகஹாராவில் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி  நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் ரசிகர்களிடையே  பரபரப்பான சூழல் நிலவியது. போட்டியின் 22வது நிமிடத்தில் இந்தியாவின் அன்னு கோல் முதல் கோல்  அடித்தார். இந்திய அணி கோல் அடித்த அடுத்த 3வது நிமிடத்தில் தென் கொரியாவின் பார்க் சியோ யோன் தனது அணிக்கான கோலை பதிவு செய்தார்.  இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்ற நிலையில்   இந்திய அணியின் நீலம் 41வது நிமிடத்தில் இந்திய அணிக்கான 2 வது கோலை அடித்து முன்னிலை பெற்றது.  

மகளிர் ஆக்கி
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தி, இந்திய அணி முதன்முறையாக மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.  ஹாக்கி தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது இதுவே முதல் முறை. தென்கொரியா அணி ஏற்கனவே 4 முறை இந்த கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 மகளிர் ஆக்கி

மற்றொரு அரையிறுதிப்போட்டியில் சீனாவை 2-0 என்ற கணக்கில் வென்று நான்கு முறை சாம்பியனான தென் கொரியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, சீனாவிடம் 2-5 என்ற கணக்கில் தோற்றது. அதன் பின்னர்ப் இந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web