இந்தியன் 2 : முதல் விமர்சனம் வெளியானது... கமல் விருதுகளைக் குவிக்க போவது நிச்சயம்!

 
இந்தியன் 2

இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது. கமல் நடிப்பு குறித்து வெளியான தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் கமல் பயங்கரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தணிக்கை குழுவில் இடம் பெற்றிருக்கும் உமர் சந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடித்து இருக்கின்றனர். முன்பு வெளியான ‘இந்தியன்’ படத்தில் ஊழலுக்கு எதிரான அப்பா மற்றும் ஊழல் செய்யும் மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்தார் கமல்ஹாசன். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார் என்பது இதுவரை வெளியான பட அப்டேட்களில் இருந்து தெரிகிறது.

Indian 2

அதாவது, சேனாதிபதி கம்பேக் எனச் சொல்லி, ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூனில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கதறல்ஸ்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.

கடந்த வாரம் இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது. முதல் பாகத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், இந்த படத்தில் ஒரே வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப்களிலும், மூன்றாம் பாகத்தில் 5 கெட்டப்பிலும் தோற்றம் அளிக்கவுள்ளார். இதன் மூலம் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்களில் நடித்த சாதனையை முறியடிக்க உள்ளார். இன்றை அரசியல் சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே இந்தியன் 2 உருவான பின்னணி என்று படத்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Indian 2

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவில் இடம்பெற்றிருக்கும் உமர் சந்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்தியன் 2’ படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஈர்க்கும் த்ரில்லிங்காக இருந்தது. கமல் இதுவரை இல்லாத நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். பயங்கர நடித்துள்ளார். பின்னணி இசையையும், இயக்கமும் சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டின் ஒரு மெகா பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக இப்படம் இருக்கும். 2025 ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும், ‘இந்தியன் 2’ அவர் அசுரத்தனமான நடிப்பை கொடுத்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ இவர் என பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web