இந்தியன் 2 அருமையான படைப்பு... மனம் திறந்த இயக்குநர் சமுத்திரக்கனி!

 
இந்தியன் 2

  இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 13ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கின்றனர். இந்த திரைப்படத்தில் பல முண்ணனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர் சமுத்திரக்கனி  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமுத்திரக்கனி   யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்  இந்தியன் 2 படத்தை பற்றியும், விசாரணை படம் பற்றியும் மனம் திறந்துபேசியுள்ளார்.

இந்தியன் 2
அந்த வீடியோவில் ”எனக்கு பொதுவாகவே விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விடுதலை படத்திற்காக தேசிய விருது கிடைத்தது மகிழ்சி தான். அந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் எல்லாம் எப்போதுமே மறக்க முடியாது. ஒரு முறை படத்தின் ஒரு காட்சியை எடுக்கும்போது என்னுடைய காலில் பாம்பு சுற்றிவிட்டது. மேலே இருந்து வெற்றிமாறன் பாம்பை உதறிவிட்டு மேலே வாருங்கள் என அசால்ட்டாக சொல்லுவார்.  படத்தில் வடிகாலில் குதிக்கும் காட்சியில் கீழே குதிக்கும் போது  வாயை திறந்ததால் எல்லாமே வாய்க்குள் போய்விட்டது.  முகத்தை வாயை கழுவிக்கொண்டு படத்தில் நடித்தேன்.

இந்தியன்2
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டி இருந்தது. இதனால் ரொம்ப சோர்வாகி விடும். அதனால் படப்பிடிப்பு நடக்கும் அதே ரோட்டில் அங்கேயே அப்படியே படுத்து விடுவோம். எங்களை கடந்து தான் பாம்புகள் எல்லாம் போகும். ரொம்பவே சோர்வாக இருந்ததால் பாம்பை பார்த்து கூட எழுந்து  ஓட முடியவில்லை. பாம்பை பார்த்துவிட்டு போ போ என்று சாதாரணமாக தான் இருந்தோம்.  மொத்தமாக படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்தது  .  படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த சில நாட்கள் கூட என்னால் தூங்கவே முடியவில்லை.

தூங்கினால் கனவில் பாம்புகள் தான்.பாசத்திற்காக நிறைய படங்கள் செய்து வலி தான் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வலி எல்லாம் மறக்கவே முடியாது ” என பேசினார்.  இந்தியன் 2 படத்தை பற்றி ‘ இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கூட்டத்தில் ஒரு ஆளாக நடிக்க நான் ரொம்பவே முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. 2 வது பாகத்தில் நான் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகமும் அருமையாக இருக்கும். ரொம்பவே நிஜமாக எடுக்கப்பட்ட ஒரு அருமையான படைப்பு ” என இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web