ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... இந்திய விமான படை தலைவர்..!
இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். சுமார் 300 கி.மீ.தொலைவில் இருந்து ஏவுகணை மூலம் அந்தப் பெரிய விமானம் தாக்கப்பட்டதாகவும், இதுவே இந்திய விமானப்படையின் மிக நீண்ட தூரதாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த தகவலை இந்திய விமானப்படைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவது இதுவே முதல்முறையாக பார்க்கப்படுகிறது.

பயங்கரவாத முகாம் ஒன்றைத் தாக்கியதற்கான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட அவர், இந்திய பிராந்தியத்தில் விழுந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

சமீபத்தில் வாங்கப்பட்ட எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டதால், பாகிஸ்தான் விமானங்களால் நமது எல்லைக்குள் நுழைய முடியவில்லை என கூறியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
