ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர் பலி!

 
இந்திய ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரி செக்டாரில் நேற்று இரவு ஊடுருவல் முயற்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது.  

இந்திய ராணுவ வீரர்கள்

எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.  மோசமான வானிலையை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சி நடைபெற்ற நிலையில், அதை நமது பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
இந்திய ராணுவம் முப்படை காஷ்மீர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி இதுவாக கருதப்படுகிறது.  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?