அமெரிக்காவில் இஸ்கான் கோவில் மீது தாக்குதல்... இந்திய தூதரகம் கண்டனம்!

 
அமெரிக்கா
 


அமெரிக்காவில் இஸ்கான் கோவில் மீது தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றதற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவில், இஸ்கான் கோவிலின் உள்ளே பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

அமெரிக்காவின் உதா மாகாணத்தில் உள்ள ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக உலக புகழ் பெற்றது. தினமும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

ISKCON Temple Attacked in U.S.—20+ Bullets Fired! What Is the Big Message?  | Sumit Peer Decoded

இந்நிலையில், இதன் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதில், 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் மீது பாய்ந்துள்ளன.இதனால், ஆயிரக்கணக்கான டாலர் அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து அந்த கோவிலின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இது குறித்து அறிக்கை ஒன்றை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அது பற்றிய புகைப்படங்களையும் இணையதளத்தில் பகிர்ந்து தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த தாக்குதல் நடந்து வருகிறது. பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் கோவிலின் உள்ளே இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது.இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது. குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்றும் தொடர்புடைய அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?