இந்திய கால்பந்து ஜாம்பவான் கண்ணீருடன் ஓய்வு.. .வைரல் வீடியோ!

 
சுனில் சேத்ரி

 இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வை அறிவித்துள்ளார்.  2002ல்  பிரபல கிளப் அணிகளில் ஒன்றான மோகன் பகான் அணியுடன் சுனில் சேத்ரி தனது கால்பந்து பயணத்தை தொடங்கினார் . 2005ல்  சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அறிமுகமான நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து சாதனை படைத்தார்.இதுவரை சுனில் சேத்ரி இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 94 கோல்களை விளாசி தள்ளியுள்ளார். இதன் மூலம் உலகில் அதிக கோல் அடித்த  வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். 39 வயதாகும் சுனில் சேத்ரி தனது கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதன்படி இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, குவைத்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.   கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தன. ஆனாலும் முயற்சி பலனளிக்காமல் தோல்வியை தழுவியது.  போட்டி முடிந்ததும், இந்திய அணி வீரர்கள் சுனில் சேத்ரிக்கு வாழ்த்து தெரிவிக்க காத்திருந்த நிலையில், அவர் கண்ணீர்விட்டு கதறி அழுதார். தோல்வியுடன் ஓய்வு பெறுகிறேன் எனக் கண்ணீர் மல்க கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web