இத்தாலியில் இந்தியர் உயிரிழந்த விவகாரம்.. பண்ணை உரிமையாளர் அதிரடியாக கைது!

 
சத்னம் சிங்

 இத்தாலியின் தலைநகர் ரோம் நகரில் லட்டினா பகுதியில் ஆயிரக்கணக்கான இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வந்தனர்.  அவர்கள் அங்கு விவசாயம், கட்டுமானம் உட்பட பல  வேலைகளை செய்து வருகின்றனர்.  அந்த வகையில் இந்திய புலம்பெயர் தொழிலாளர் சத்னம் சிங் (31) என்பவர் வயலில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டாகியுள்ளது. இதனால் அவர் வலியில் அலறித் துடித்துள்ளார்.

ரத்னம்

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, அவரை வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் சத்னம் சிங்கை அவரது வீட்டின் அருகே சாலையில் வீசி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சத்னம் சிங்கை மீட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரோம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்னம் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.


 
இந்த சம்பவத்திற்கு இத்தாலியில் உள்ள இடது சாரி அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பார்லிமென்டில் பேசுகையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிப்பதாக உறுதியளித்தார். இந்த நிலையில், சத்னம் சிங் மரணம் தொடர்பாக பண்ணையின் உரிமையாளர் அன்டோனெல்லோ லோவாடோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web