பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம்!

 
கப்பல் படை

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் 227 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்து வரும் மே மாதம் 14ம் தேதிக்குள் திறமையும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

தமிழக இளைஞர்கள், வேலைத் தேடி வரும் நிலையில், மாநில அரசு வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை எழுத காட்டுகின்ற ஆர்வத்தை, மத்திய அரசு சார்ந்த போட்டி தேர்வுகளையோ, வேலை வாய்ப்புகளைப் பற்றியோ அதிகளவில் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். இந்திய கடற்படையில் காலியாக உள்ள SSC Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech, M.Sc, ME/M.Tech மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.04.2023 முதல் 14.05.2023 வரை விண்ணப்பிக்கலாம். 

துறைமுகம் கப்பல் ஷேர் கடல்

பதவி : SSC Officer

காலியிடங்கள் : 227

கல்வித்தகுதி : BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc 

வயது வரம்பு : ஜனவரி 2, 1999 முதல் ஜூலை 1, 2004-குள் பிறந்தவராக இருக்க வேண்டும்

சம்பளம் : மாதம் ரூ.56,100

விண்ணப்பக் கட்டணம் : இல்லை

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் துறைமுகம் கப்பல்

விண்ணப்பிக்கும் முறை : 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2023

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!