28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 1- பிரம்மாண்ட ரீ-ரிலீஸ்!

 
இந்தியன்

 உலக நாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம்  இந்தியன். 1996ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம்   விழிப்புணர்வு நிறைந்த அதிரடி படமாகும். இதில் கமல் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்திருந்தார். ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என மிரட்டல் விடுக்கிறார்.

இந்தியன்

அத்துடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில்  லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்பட பணிகள் முடிவடைந்து  ஜூலை 12 ம் தேதி வெளியாக தயாராகவுள்ளது. படத்தின் முதல் பாடலானா 'பாரா' சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியன்

விரைவில்  இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில் அப்படத்தின் பாகம் 1 மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்தியன் திரைப்படம்  ஜூன் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என  இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தியன் படத்தை  பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  இந்தியன் படத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு ரிரீலிஸ் செய்யப்படும் இத்திரைப்படத்தை பார்க்க மக்களிடையே ஆர்வம் உருவாகியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!