மாலத்தீவை விட்டு முழுவதும் வெளியேறிய இந்திய வீரர்கள்.. அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

 
முகமது முய்சு

மாலத்தீவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீனாவை ஆதரிப்பதாக அறியப்பட்ட முகமது முய்சு வெற்றி பெற்றார். மாலத்தீவு அதிபராக பதவியேற்றதில் இருந்து, முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது, மாலத்தீவில் நிலைகொண்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் இனவெறியுடன் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலையும் அதிகப்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவில் நிலைகொண்டுள்ள இந்திய வீரர்களை மே 10-ம் தேதிக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

மாலத்தீவு அதிபர் முகமது முயிசு

இந்நிலையில், மாலத்தீவில் நிலைகொண்டிருந்த இந்திய ராணுவப் படைகள் காலக்கெடு முடிவுக்கு வருவதற்கு முன் முழுமையாக சென்று விட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களின் கடைசி தொகுதியும் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் தலைமை செய்தி தொடர்பாளர் சீனா வாலிட் தெரிவித்துள்ளார். மாலத்தீவில்  இருந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web