மக்கள் அலையில் மிதந்த இந்திய வீரர்கள்.. கூட்ட நெரிசலில் ரசிகர்களுக்கு நேர்ந்த சோகம்!

 
மரைன் டிரைவ்

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து, பார்படாஸில் தாக்கத்தை ஏற்படுத்திய பெரில் புயல் அச்சுறுத்தலை சமாளித்து 4 நாட்களுக்கு பிறகு டி20 உலக கோப்பை கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து பிரதமர் மோடியின் இல்லத்திற்கு சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில் முதலில் அனைவரும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து மும்பைக்கு வந்த  இந்திய வீரர்களை வரவேற்க நேற்று மாலை மும்பை மரைன் டிரைவ் பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர்.திரும்பும் திசைகளில் எல்லாம் கூட்டம் அலைமோத வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர்.

வான்கடே மைதானத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் மும்பை போலீசார் தெரிவித்தனர். ரசிகர்கள் திரண்டிருக்கும் மரைன் டிரைவ் பகுதியின் சாலையோரத்தில் காலணிகள் குவிந்து கிடக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web