இந்திய மாணவருக்கு கத்திக்குத்து.. அமெரிக்காவில் கொடூரம்...!!

 
வருண்

அமெரிக்காவில்  24 வயது இந்திய மாணவர் ஒருவர், கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நியூயார்க் டைம்ஸ் இந்திய மாணவர் பிழைக்க 5 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.   ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 29ம் தேதி, காலை இந்தியானாவின் வால்பரைசோ நகரில் உள்ள பொது உடற்பயிற்சி கூடத்தில்  ஜோர்டான் ஆண்ட்ரேட் என்ற 24 வயது இளைஞர் ஒருவர்  இந்திய மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

வருண்

இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த விசாரணையின் அடிப்படையில்  அந்த 24 வயது நபர் ஆண்ட்ரேட் கைது செய்யப்பட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் இந்திய மாணவர் வருண், கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு  ஃபோர்ட் வெய்ன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் 0 முதல் 5 சதவிகிதம் வரை மட்டுமே என   மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

வருண்

 ஆண்ட்ரேட், சம்பவத்தன்று காலை மசாஜ் செய்யக் சென்ற போது  மசாஜ் அறையில் தனக்குத் தெரியாத, வித்தியாசமான நபரைக் கண்டதால் அவர்  தனக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எண்ணி  தற்காப்புக்காக கத்தியால் குத்தினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web